Snapdeal

Thursday, June 18, 2009

பள்ளி புத்தக பை சுமை

பேருந்தில் செல்ல இலவச பாஸ்
ஆனால் புத்தக பைக்கு லக்கேஜ்
கட்டணம் கேட்டார் நடத்துனர்!

கர்த்தர் சிலுவையை தோளில்
சுமந்தார், இவர்கள் புத்தக பையை
தினமும் சுமக்கிறார்கள்!

புத்தக பை முக்கால் இருக்கையை
பிடிக்க இவர்கள் நுனியில் இருந்து
பாடம் படிக்கிறார்கள்!

சிறுவர்கள் சுமையை தீர்க்க வழி?

Wednesday, June 10, 2009

தடுப்பூசி (இது ரசிக்க அல்ல கண்ணீர் வடிக்க )

எறும்பு கடி மாதிரி இருக்கும் என்று சொல்லி
எமனிடம் அனுப்பிவிட்டீர்களே-என்று
அழுதுகொண்டே இறந்தது ஜி.கெச்சில்
தடுப்பூசி போடப்பட்ட குழந்தை!!!


இனியும் திருந்துவார்களா கயவர்கள்??