Snapdeal

Wednesday, July 28, 2010

என் காதல் பொக்கிஷங்கள்

வருடங்கள் அழிந்தாலும்
வாழ்வு அழியாமல்
உன்வாழ்த்து அட்டைகள்

மை உலர்ந்தாலும்
உணர்வுகள் உலராமல்
உன் கடிதங்கள்

அன்பு குறைந்தாலும்
அழகு குறையாமல்
உன்அன்பளிப்புகள்

நாட்கள் கரைந்தாலும்
நூற்கள் நையாமல்
நீ கொடுத்த கைக்குட்டை

மணம் இழந்தாலும்
மென்மை இழக்காமல்
உன் கூந்தலில் சூடிய
மலரின் இதழ்கள்

நீ வெறுத்து போனாலும்
புன்முறுவலோடு உன்
புகைப்படம்

நீ மறந்து போனாலும்
இறந்து போகாமல்
உன் நினைவுகள்

இத்தனையும்
சேர்த்து வைத்துள்ளேன்
உன்னை தவிர

(உங்கள் மேலான ருத்துக்களை தெரிவியுங்க.)

Monday, July 26, 2010

பூஜ்ஜியத்தின் சதி

அரசு வேலைக்கு விண்ணப்பம்
முன்னூறு ரூபாய்க்கு வாங்கினேன்!
அதே முன்னூறில் இன்னும்
மூன்று பூஜ்ஜியங்கள் சேர்த்து
"அந்த அரசு வேலையையே"
இன்னொருவர் வாங்கிவிட்டார்!!



(உங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி.)

Sunday, July 25, 2010

நூலகத்தில் கண்ட கவிதை

கனவிலே கண்ட கவிதையை
காண்கிறேன் நூலகத்தில்

வெண்முகப்பில் உருண்டோடும்
கருமணி கவிகள் இரண்டு
அதன் மேல் திரண்டோடும்
வில் கவிகள் இரண்டு

அதிலிருந்து சரிந்தோடும்
நாதஸ்வர கவி ஒன்று
அதன் கீழ் விரிந்தோடும்
செவ்விதழ் கவி இரண்டு

இருமருங்கிலும் சுருண்டோடும்
நூல் குறியீடுகள் இரண்டு
கவிதைகளை படித்து படித்து
குறியிடுகிறது காற்று

இவையெல்லாம்
கவிதைநூலில் இல்லை
காகிதத்தில் இல்லை
கரும்பலகையில் இல்லை
கறுப்பு நூல் நெய்த உடையில்
வெள்ளை கவிப்பாவையாய் நீ

(உங்கள் மேலான ருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி).


Friday, July 23, 2010

உள்ளே/வெளியே


பாலபிஷேகமும்
, பழபிஷேகமும்
நடந்தது கோயிலுக்கு உள்ளே!
பசியில் பாலுக்காக அழும் குழந்தை
கோயிலுக்கு வெளியே

சிறப்பு தரிசனத்திற்கு ஆயிரம் ரூபாய்
கோயிலுக்கு
உள்ளே!
வயதான யாசிகளுக்கு ஒரு ரூபாய் அளிக்க
மனதில்லை கோயிலுக்கு வெளியே!

போலி சாமியார்களின் ஆபாச அசிங்கங்கள்
ஆசிரமத்துக்கு உள்ளே !
மக்களை ஏமாற்ற ஆன்மீக தந்திரங்கள்
ஆசிரமத்துக்கு வெளியே!

விசாரணை என்ற பெயரில் அப்பாவிகள்
சிறைக்கு உள்ளே!
அதிகாரத்தாலும், பணத்தாலும் குற்றவாளிகள்
சிறைக்கு வெளியே!

பல திறமையாளர்களின் கடும் உழைப்பு
திரைக்கு உள்ளே!
நாயகனுக்கு கட் அவுட்டும், மாலையும்
திரைக்கு வெளியே!


(உங்கள் மேலான ருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி.)

வெட்டுக்குத்துகள்



தமிழகத்தில் வெட்டு குத்துகள்
சகஜமாகிவிட்டது
தொடர் மின்வெட்டு
அரசியல்
உள்குத்துகள்!!

கவுரவத்துக்காக காதலர்களை
வெட்டுதல்
ஆடல் அழகியின் ரவிக்கையில் ரூபாய் நோட்டு
குத்துதல்

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அஸ்திவாரம்
வெட்டுதல்
போலி மதிப்பெண் சான்றிதழ் அச்சு
குத்துதல்

சாலைஓர மரங்களை
வெட்டுதல்
தேர்தலில் கள்ள ஓட்டு
குத்துதல்

அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம்
வெட்டுதல்
இளைஞர்கள் போதை ஊசி
குத்துதல்

அரசியல்வாதிகளுக்காக போக்குவரத்தை
வெட்டுதல்
இளைஞர்கள் உடல் பாகங்களில் டாட்டூ
குத்துதல்

இதெல்லாம் என்ன வெட்டு குத்து
மனிதனை, குழந்தைகளை கூட
வெட்டுவதும் குத்துவதுமே
பெருகிவிட்டது

இந்த மாதிரி வெட்டுதல்களை
வெளிநடப்பு செய்து
குத்துதல்களை கூண்டோடு
குலைத்து விட்டு

நன்மைகள் பல செய்ய
நடவடிக்கை மேற்கொள்வோம்
மனிதனே


(உங்கள் மேலான ருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி.)

Wednesday, July 21, 2010

சிக்னல் விழுந்தது காதல் மலர்ந்தது



மாலை நேரத்தில் சிக்னலில்
நின்றுகொண்டிருந்தேன் என்
வாகனத்தில் மோதி நின்றாய்
திரும்பி பார்த்தேன் எதுவும்
உடையவில்லை
உன் முகம் பார்த்தேன் என் இதயம்
உடைத்துவிட்டாய்

சாரி கேட்டாய் நானும் சரி
என்றேன் சராசரி மனிதனாய்
சில வினாடிகள் நான் சிலை
கல்லென நின்றேன்
சற்று நேரத்தில் பச்சை விளக்கு
சல்லென நீ பறந்தாய்

பின்தொடர்ந்து தெரிந்துகொண்டேன்
உன் முகவரியை
பின் இரவில் எழுதத்தொடங்கினேன்
இக்கவிதையின் முதல் வரியை

காதல் படிந்துவிட்டது என் இதயத்தில்
உன் அழகை ரசித்து ரசித்து மடிந்துவிட்டது
என் இரவு - விரைவில் சந்திப்போம்
காதல் சிக்னலில்


(உங்கள் மேலான ருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி.)

Tuesday, July 13, 2010

பள்ளி - முதல் நாள்

பள்ளியில் சேர முதல் நாள்
பயணம் புத்தக பையோடு!
பையில் புத்தகமில்லை
பணக் கத்தைகள்!!


(உங்கள் மேலான ருத்துக்களை - இது தாங்க எனக்கு எனர்ஜி.)

Monday, June 7, 2010

வார்த்தைகள் இல்லையடி

"உன் அழகைச் சொல்ல
வார்த்தைகள் இல்லையடி!"
என்று எழுதி கிழித்திவிட்டேன்,
அதிலும் வந்துவிட்டதே!!
ஐந்து வார்த்தைகள்



(உங்கள் மேலான ருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி.)

Thursday, May 20, 2010

வாழ்க்கையே கவிதையா?

கற்பனை செய்தால்
கவிதை வருமாம்!
அப்படியென்றால் என்
வாழ்க்கையே கற்பனையில்
தான்- இப்படிக்கு பார்வையற்றவன்!



(உங்கள் மேலான ருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி.)

Saturday, May 15, 2010

விளங்காத விழிப்புணர்ச்சி!



"காற்றை மாசுபடுத்தாதீர்" என்று
புகைவிடும் வண்டியில்!

"குடிநீரை வீணாக்காதே" என்று
சினிமா மழைக்கு வந்த லாரியில்!

"மரம் வளர்ப்போம்" என்று
மரத்தை வெட்டியெடுத்து சென்ற வண்டியில்!

"மண் அரிப்பைத் தடுப்போம்" என்று
திருட்டு மணல் லாரியில்!

"குடி குடியைக் கெடுக்கும்" என்று
மதுபான குடுவையில்!

"குழந்தைத்தொழிலாளி முறையை ஒழிப்போம்" என்று
சிறுவன் ஒட்டிய சுவரொட்டி விளம்பரத்தில்!......

ஒன்றும் விளங்கவில்லை மக்களுக்கு.



(உங்கள் மேலான ருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி.)

Saturday, April 24, 2010

எது வரை என் காதல்



உன் முகத்தை பார்த்திருப்பேன் - என்
பார்வை பாதிக்கும் வரை

உன்னோடு உரையாடிருப்பேன் - என்
கனவு உறக்கம் உறையும் வரை

உன் பேச்சுக்களை ரசித்திருப்பேன் - என்
மனம் மறையும் வரை

உன் நினைவுகளை சுமந்திருப்பேன்-என்
நினைவாற்றல் நிலைகுலையும் வரை

உனக்காக காத்திருப்பேன் - என்
சுவாசத்தில் காற்று இருப்பு வரை

என் கல்லறை சுவர்கள் கூட எடுத்துரைக்கும்
நம் காதலை இவ்வுலகம் அழியும் வரை


(உங்கள் மேலான ருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி.)


Monday, April 19, 2010

ஆயிரம் கவிதைகள்



ஆயிரம் கவிதைகள் என்
கண் முன்னே விரிகிறது
அறுபது வினாடிகளில்..
அத்துனையும் படிக்க முற்படுகிறேன்
முடியாமல் திளைத்து
அவற்றில் ஒரு சிலவற்றை
பிரதி எடுக்கிறேன் என் மனதில்
உன் கண்களிலிருந்து!!


(உங்கள் மேலான ருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி.)

Thursday, April 15, 2010

என்னவளுக்காக ஏங்குபவன்




















என்னவளே! என்னைவிட்டு ஏன் பிரிந்தாய்
என்ற காரணம் தெரியாமலே தினமும்
எரிந்து கொண்டிருக்கிறேன்
என்தவறு செய்தேன் நான்
எதற்கு இந்த ரண வலி

எண்ணற்ற முயற்சிகள் செய்தும்
ஏமாற்றமே மிஞ்சியது
என் மனம் புரிந்தவளே இப்போது
என்னாயிற்று உனக்கு

எப்படி பிரிய மனம் வந்தது எனைவிட்டு
எங்கே செல்வேன் உனைவிட்டு
எந்தன் மனக்காயங்களின் வலிகளை
எவ்வாறு எடுத்துரைப்பேன்
என் காயத்திற்கான மருந்தினை
எவரிடம் கேட்பது - இப்படி

எதையும் உன்னிடம் கேட்க
கூட வாய்ப்பு கொடுக்க
மறுக்கும் உனக்காக
ஏங்கிக் கொண்டிருக்கிறேன் என்
எஞ்சிய காலங்களிலும்!!


(உங்கள் மேலான ருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி.)

Monday, March 15, 2010

ஹைக்கூ

தென்னை மரம் - இனிமையான
குளிர்பான தயாரிப்பு தானியங்கி
நிறுவனம்!!!!