Snapdeal

Saturday, April 24, 2010

எது வரை என் காதல்



உன் முகத்தை பார்த்திருப்பேன் - என்
பார்வை பாதிக்கும் வரை

உன்னோடு உரையாடிருப்பேன் - என்
கனவு உறக்கம் உறையும் வரை

உன் பேச்சுக்களை ரசித்திருப்பேன் - என்
மனம் மறையும் வரை

உன் நினைவுகளை சுமந்திருப்பேன்-என்
நினைவாற்றல் நிலைகுலையும் வரை

உனக்காக காத்திருப்பேன் - என்
சுவாசத்தில் காற்று இருப்பு வரை

என் கல்லறை சுவர்கள் கூட எடுத்துரைக்கும்
நம் காதலை இவ்வுலகம் அழியும் வரை


(உங்கள் மேலான ருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி.)


2 comments:

Katz said...

//உன் நினைவுகளை சுமந்திருப்பேன்-என்
நினைவாற்றல் நிலைகுலையும் வரை//

அருமையான வரிகள்.

காதல் என்னவென்று இன்னும் கல்லாதவரை
கவனிக்க வேண்டுகிறேன்.
இந்த கல்லாதவரை.

ஹி! ஹி!

கல்லாதவன் - ந.ராஜ்குமார் said...

#)வழிப்போக்கன்-
கவனிப்புக்கும் நன்றி
கவனிக்க வேண்டியதற்கும் நன்றி
இந்த கல்லாதவனை
கல்லால் கவனிக்காமல் இருந்தால் சரி