
பாலபிஷேகமும், பழபிஷேகமும்
நடந்தது கோயிலுக்கு உள்ளே!
பசியில் பாலுக்காக அழும் குழந்தை
கோயிலுக்கு வெளியே
சிறப்பு தரிசனத்திற்கு ஆயிரம் ரூபாய்
கோயிலுக்கு உள்ளே!
வயதான யாசிகளுக்கு ஒரு ரூபாய் அளிக்க
மனதில்லை கோயிலுக்கு வெளியே!
போலி சாமியார்களின் ஆபாச அசிங்கங்கள்
ஆசிரமத்துக்கு உள்ளே !
மக்களை ஏமாற்ற ஆன்மீக தந்திரங்கள்
ஆசிரமத்துக்கு வெளியே!
விசாரணை என்ற பெயரில் அப்பாவிகள்
சிறைக்கு உள்ளே!
அதிகாரத்தாலும், பணத்தாலும் குற்றவாளிகள்
சிறைக்கு வெளியே!
பல திறமையாளர்களின் கடும் உழைப்பு
திரைக்கு உள்ளே!
நாயகனுக்கு கட் அவுட்டும், மாலையும்
திரைக்கு வெளியே!
(உங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி.)
No comments:
Post a Comment