கனவிலே கண்ட கவிதையைகாண்கிறேன் நூலகத்தில்
வெண்முகப்பில் உருண்டோடும்
கருமணி கவிகள் இரண்டு
அதன் மேல் திரண்டோடும்
வில் கவிகள் இரண்டு
அதிலிருந்து சரிந்தோடும்
நாதஸ்வர கவி ஒன்று
அதன் கீழ் விரிந்தோடும்
செவ்விதழ் கவி இரண்டு
இருமருங்கிலும் சுருண்டோடும்
நூல் குறியீடுகள் இரண்டு
கவிதைகளை படித்து படித்து
குறியிடுகிறது காற்று
இவையெல்லாம்
கவிதைநூலில் இல்லை
காகிதத்தில் இல்லை
கரும்பலகையில் இல்லை
கறுப்பு நூல் நெய்த உடையில்
வெள்ளை கவிப்பாவையாய் நீ
(உங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி).
No comments:
Post a Comment