வருடங்கள் அழிந்தாலும்வாழ்வு அழியாமல்
உன்வாழ்த்து அட்டைகள்
மை உலர்ந்தாலும்
உணர்வுகள் உலராமல்
உன் கடிதங்கள்
அன்பு குறைந்தாலும்
அழகு குறையாமல்
உன்அன்பளிப்புகள்
நாட்கள் கரைந்தாலும்
நூற்கள் நையாமல்
நீ கொடுத்த கைக்குட்டை
மணம் இழந்தாலும்
மென்மை இழக்காமல்
உன் கூந்தலில் சூடிய
மலரின் இதழ்கள்
நீ வெறுத்து போனாலும்
புன்முறுவலோடு உன்
புகைப்படம்
நீ மறந்து போனாலும்
இறந்து போகாமல்
உன் நினைவுகள்
இத்தனையும்
சேர்த்து வைத்துள்ளேன்
உன்னை தவிர
(உங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்க.)
2 comments:
கவிதை அருமை.... ரசிக்கத்தக்க வரிகள்... அனுபவித்து எழுதுவீர்களோ
நீ வெறுத்து போனாலும்
புன்முறுவலோடு உன்
புகைப்படம்
அன்பு குறைந்தாலும்
அழகு குறையாமல் உன்
அன்பளிப்பு பொருட்கள்
இவை நான் மிகவும் ரசித்த வரிகள்
@)Siva said...
// கவிதை அருமை.... ரசிக்கத்தக்க வரிகள்... அனுபவித்து எழுதுவீர்களோ
நீ வெறுத்து போனாலும்
புன்முறுவலோடு உன்
புகைப்படம்
அன்பு குறைந்தாலும்
அழகு குறையாமல் உன்
அன்பளிப்பு பொருட்கள்
இவை நான் மிகவும் ரசித்த வரிகள்//
அனுபவம் பெற்றது போல்
பாவித்து எழுதிய கவிதை
வருகைக்கும் உங்களுடைய கருத்துக்கும் நன்றி
Post a Comment